ஊழல் குற்றச்சாட்டு தென் கொரியா முன்னாள் அதிபருக்கு சிறப்பு பொதுமன்னிப்பு

சியோல்: ஊழல் குற்றச்சாட்டில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென் கொரியாவின் முன்னாள் அதிபர் லீ மியுங் பாக்கிற்கு சிறப்பு பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது. தென் கொரியாவின் முன்னாள் அதிபர் லீ மியுங் பாக் கடந்த 2008-2013ம் ஆண்டு வரை அதிபராக இருந்த போது, சாம்சங் உள்ளிட்ட பெரு நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக  குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து லீ மியுங் பாக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அந்நாட்டின் நீதித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், `` 1,373 குற்றவாளிகளுக்கு சிறப்பு பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது. தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி சில அரசியல் தலைவர்களையும் விடுவிக்க அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள் அதிபர் லீ மியுங் பாக் இன்று விடுவிக்கப்பட உள்ளார்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: