×

புஷ்பா சுகுமார் இயக்கத்தில் பிரபாஸ்

ஐதராபாத்: புஷ்பா பட டைரக்டர் சுகுமார் இயக்கும் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் தீபிகா படுகோனுடன் நடித்து வரும் பெயரிடப்படாத படம் ரிலீசாக உள்ளது. இதில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து கேஜிஎஃப் பட டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் சலார் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

இதற்கிடையே மாருதி இயக்கும் படத்திலும் பிரபாஸ் நடிக்க உள்ளார். இந்த படங்களை முடித்துவிட்டு 2024ல் சுகுமார் இயக்கத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார் பிரபாஸ். ரங்கஸ்தலம், புஷ்பா படங்களுக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, பிரபாஸ் நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இதை அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். இவர் காஷ்மீர் பைல்ஸ், கார்த்திகேயா 2 உள்பட பல படங்களை தயாரித்தவர்.


Tags : Pushpa Sukumar , Prabhas directed by Pushpa Sukumar
× RELATED புஷ்பா சுகுமார் இயக்கத்தில் ராம் சரண்