×

வேளச்சேரி இந்து மயான பூமி 10 நாட்கள் இயங்காது என அறிவிப்பு

சென்னை: அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி இந்து மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் பாரதி நகர் மயானபூமி அல்லது ஆலந்தூர் மண்டலம் - பாலகிருஷ்ணாபுரம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு  பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-172ல் உள்ள வேளச்சேரி இந்து மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் 28.12.2022 முதல் 06.01.2023 வரை 10 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது.

எனவே, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-178க்குட்பட்ட வேளச்சேரி பாரதி நகர் மயானபூமி அல்லது ஆலந்தூர் மண்டலம், வார்டு-163க்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மயானபூமி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

Tags : Velacheri Hindu Manic Earth , Notification that Velachery Hindu Mayan Bhoomi will not function for 10 days
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...