×

டெல்லியில் பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு..!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. பினராயும், ஆளுநரும் நேரடி கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கேரள அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இதையடுத்து கேரள அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்தார்.

அதன் அடிப்படையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது; கேரள வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவுப் பகுதிகள் சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து எடுத்துக் கூறினார். இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு ஒன்றிய அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர். மேலும், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான அதிவேக ரயில் பாதை திட்டத்திற்கு இன்னும் அரசு அனுமதி வழங்காதது குறித்தும் பிரதமரிடம் குறிப்பிட்டார்.


Tags : Kerala ,CM ,Pinarayi Vijayan ,Modi ,Delhi , Kerala Chief Minister Pinarayi Vijayan meets Prime Minister Modi in Delhi..!
× RELATED தேர்தல் பத்திர விவகாரத்தை திசை...