திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் 10 நாட்களுக்கு தங்கத் தேர் உலா ரத்து : கோயில் நிர்வாகம் அறிவிப்பு

தூத்துக்குடி: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஆண்டிகளால் உலகமே வியக்கும் வண்ணம் கட்டப்பட்டது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் கட்டிடக் கலை ஒரு அதிசயம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் 10 நாட்களுக்கு தங்கத் தேர் உலா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவெம்பாவை விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் பவனி உலா நடைபெற உள்ளதால் இன்று முதல் ஜனவரி 6ம் தேதி வரை தங்கத் தேர் உலா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவெம்பாவை உற்சவத்தை முன்னிட்டு, நாளை முதல் 10 நாட்களுக்கு பக்‍தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்த கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. திருச்செந்தூர் கோயிலின் கிரி பிரகாரத்தில் பக்‍தர்கள் மாலை வேளையில் தங்கத்தேரை இழுத்துச் சென்று வழிபடுவது வழக்‍கம்.

இந்நிலையில், நாளை முதல் 10 நாட்களுக்‍கு திருவெம்பாவை உற்சவத்தின் போது மாலையில் மாணிக்‍கவாசகர் புறப்பாடு நடைபெறும் என்பதால், பக்‍தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபடுவதற்கு தடை விதிக்‍கப்படுவதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். கோவில் நிர்வாகத்தின் இந்த முடிவால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: