×

தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் உள்ள மக்கள் ஐடி அளிக்கப்படவுள்ளது: தமிழக அரசு தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் உள்ள மக்கள் ஐடி அளிக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.  சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி எண் பயன்படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில குடும்ப தரவுத்தளம் (the state family database) தமிழ்நாடு அரசால் உருவாக்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாகி உள்ளது. மொபைல் சிம் வாங்குவது தொடங்கி வங்கி பரிவர்த்தனை, விமான பயணம் என அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்திய குடிமக்களுக்கு ஒன்றிய அரசு மூலம் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. முன்பு ரேஷன் கார்டு இருந்தது போல் இப்போது ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் தனி நபர் அடையாள அட்டையாகும். வங்கி கணக்கு, மொபைல் சிம், பான் கார்டு, ரேஷன் கார்டு என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் உள்ள மக்கள் ஐடி தமிழக அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்கள் ஐடி சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி எண் பெரிதும் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மாநில குடும்ப தரவு தளம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Tamil ,Nadu ,Govt , 10 to 12 digit People ID to be issued to residents of Tamil Nadu: Tamil Nadu Govt
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...