×

ரொனால்டோவுக்கு ரூ7 கோடி சொகுசு கார் பரிசளித்த காதலி

லண்டன்: கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் பல கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கிறிஸ்துமஸ் பண்டிகையினையொட்டி ரொனால்டோவுக்கு அவரது காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ரூ.7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனைப் பார்த்த ரொனால்டோ வாயடைத்து நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரொனால்டோ தனது புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், ரொனால்டோ தனது புதிய காரை பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப்போய் நின்ற முழு காட்சியையும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரொனால்டோ ஒரு கார் பிரியர். அவர் தனது கேரேஜில் பல சுவாரஸ்யமான கார்களை வைத்திருக்கிறார். அண்மையில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் அணி கால்இறுதியில் மொராக்கோவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Tags : Ronaldo , Ronaldo's girlfriend gifted him a Rs 7 crore luxury car
× RELATED 38 வயதிலும் கலக்கி வரும் கிறிஸ்டியானோ...