சென்னை வடபழனியில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் காரணமாக 28, 29 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: வடபழனி ஆற்காடு சாலையில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை முதல் தெற்கு சிவன் கோவில் தெரு வரை தற்போதுள்ள 525 மிமீ விட்டமுள்ள குடிநீர்க் குழாயுடன் 500 மிமீ விட்டமுள்ள குடிநீர் குழாயை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 28.12.2022 மற்றும் 29.12.2022 ஆகிய நாட்களில் பகுதி-8, 9 மற்றும் பகுதி-10ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:

வடபழனி ஆற்காடு சாலையில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை முதல் தெற்கு சிவன் கோவில் தெரு வரை தற்போதுள்ள 525 மிமீ விட்டமுள்ள குடிநீர்க் குழாயுடன் 500 மிமீ விட்டமுள்ள குடிநீர் குழாயை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கோயம்பேட்டில் அமைந்துள்ள சூளைமேடு குடிநீர் பகிர்மான நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.  

எனவே,  பகுதி-8, 9 மற்றும் பகுதி-10 ஆகிய பகுதிகளில் 28.12.2022 மற்றும் 29.12.2022 ஆகிய நாட்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.  ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள கீழ்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

 பகுதிப் பொறியாளர்-8  (அண்ணா நகர்)    கைபேசி எண்.8144930908     

 பகுதிப் பொறியாளர்-9  (தேனாம்பேட்டை)    கைபேசி எண்.8144930909     

 பகுதிப் பொறியாளர்-10  (கோடம்பாக்கம்)    கைபேசி எண்.8144930910

Related Stories: