×

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மக்களை பயமுறுத்தும் மின் கம்பம்

குன்றத்தூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னறிவிப்பு இன்றி 20,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். உயிர்ப்பலி ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது என்று தற்போது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

ஆனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள உயரழுத்த மின்கம்பம் ஒன்று நீண்ட நாட்களாக சாய்ந்து எந்தநேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் உள்ள பியூஸ் பாக்ஸ் திறந்த கிடப்பதால் ஷாக் அடிக்கும் அபாயம் உள்ளது. அவ்வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் கால் நடைகளையும் மின்சாரம் தாக்கும் ஆபத்துள்ளது. எனவே, பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்று பொதுமக்களும் சமூகநல ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்
ளனர்.

Tags : PWD ,Sembarambakkam , An electric pole scares people at the public works office on the banks of the Sembarambakkam lake
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...