வத்திராயிருப்பில் மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறும் தாலுகா அலுவலக வளாகம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறும் தாலுகா அலுவலக வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல பணிகளுக்கும், இங்குள்ள இசேவை மையத்தில் ஆதார் கார்டு பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம், ஆதார் கார்டு புதிதாக எடுப்பதற்கு என பல்வேறு பணிகளுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ரேஷன் கார்டு ரேகை பதிவு செய்வதற்கும் வயதானவர்களும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் செல்லும் பாதைகள் மண் சாலையாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால், தாலுகா அலுவலகம் செல்லக்கூடிய இரண்டு பாதைகளும் சேறும், சகதியுமாகி மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செல்ல அவதிப்படுகின்றனர். அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களும் சிரமப்படுகின்றனர். வளாகத்தில் உள்ள பாதைகள் மண் சாலையாக இருப்பதால், மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி வருகிறது. எனவே, இரண்டு பக்க பாதைகளையும் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: