நன்னிலம் பகுதியில் ஆற்றங்கரைகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

நன்னிலம் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரத்தில் ஓடும் ஆற்றங்கரைகளில், கரை வலுப்படுத்தும் வகையிலும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில், மரக்கன்றுகள் நட்டு, ஆற்றங்கரைகளை பராமரிக்கப்பட வேண்டும், என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, கட்டுமான பணிகள் மற்றும் பராமரிப்பு, மற்றும் நீர்வள ஆதாரத்துறை என இரண்டாகப் பிரிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

அரசுத்துறை சார்ந்த கட்டிடங்களை தமிழக அரசின் பொதுப்பணி த்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதே போல் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில், தமிழகத்தில் ஓடக்கூடிய ஆறுகள், பராமரிக்கப்படுவதோடு, கரைகளை பாதுகாத்தல், கரைகளில் ஏற்படக்கூடிய, இடர்பாடுகளை தவிர்க்கச் செய்தல், ஆற்று நீரை, சேமித்தல், தகுந்த நேரத்திற்கு, பாசனத்திற்கும் விவசாயத்திற்கும் திறந்து விடுதல், நிலத்தடி நீர் சேமிப்பில், ஆறுகளின் பங்குகளை பெருமளவில் மேற்கொள்ள செய்தல், மேலும் ஆற்றுக்கரைகளில், ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாத்தல் போன்ற பணிகளைமேற்கொண்டு வருகிறது.

சமீபகாலங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கரைகளில், ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகள் கொட்டுவதாலும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, கரை பலமிழந்து போகும் சூழலும் ஏற்படுகிறது. கரையாக்கிரமிப்புகளால், கரையை பலப்படுத்துவதற்காக வளர்க்கப்பட்ட மரங்கள், அகற்றப்படுவதால், ஆற்றங்கரைகள் பருவ மழை காலங்களில் பாதிப்படைந்து, மழைநீர், ஆற்றில் பெருக்கெடுத்து வரும் பொழுது, சில நேரங்களில், பலம் இழந்த கரைகளில் உடைப்படுத்து, ஊருக்குள் நீர் போகும் நிலை ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது போன்ற நிலைகள் ஏற்படாமல் இருக்க, மாறுபட்டு வரும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப, புவி வெப்ப மாயமாவதை தடுக்கும் வகையில், ஆற்றங்கரைகளை பலப்படுத்துக் கூடிய வகையிலும், ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையிலும், பாதுகாக்க, பொதுப்பணி துறையின், பணியாற்றக்கூடிய கரை காவலர்களைக் கொண்டு, மரங்கள் மற்றும் சமூக காடு வளர்ப்புகளை, மேம்படுத்தி, கரையை வளப்படுத்துவதோடு, நிலத்தடி நீர் சேமிக்கும் வகையில், கரைகளில், பனை மரங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். தமிழக அரசு மாசுக்கட்டுப்பாட்டை தீவிரமாக நடைமுறைப்படுத்திய வரும் நிலையில், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றக்கூடிய ஆறுகளை , பாதுகாக்கவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் போடக்கூடிய ஆறுகள், பருவ மழை காலங்களில், நீர் வரத்து உள்ள ஆறுகளாக இருக்கின்றன. வானம் பார்த்த நிலப் பகுதியாக இருக்கக்கூடிய டெல்டா மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில், தகுந்த இடங்களில் புதிய நீர்த்தேக்கங்களை ஏற்படுத்துவதோடு, பருவ மழை இல்லாத பிற காலங்களில், சேமிக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடிய வகையில், நீர் மேலாண்மை திட்டத்தை, உருவாக்கி, புதிய சிறு குறு காடுகளை உருவாக்கி, சுற்றுச்சூழல் மேம்பாட்டு ஏற்படுத்தி, ஆறுகளை பாதுகாக்கநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்ற கோரிக்கை பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும்இருந்து வருகிறது. பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Related Stories: