×

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நிலப்பிரச்னையால் மாற்றுத்திறனாளி மகனுக்கு தவறான ஊசி போட்ட போலி டாக்டர்-விவசாயி குடும்பத்துடன் திடீர் போராட்டம்

திருவண்ணாமலை : நிலப்பிரச்னையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மாற்றுத்திறனாளி மகனுக்கு தவறான ஊசி போட்டு உடல் நலனை பாதிக்க செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயி குடும்பத்துடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் நடந்தது. அதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வெற்றிவேல், ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், அரசு நலத்திட்டங்கள், சுயதொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 320 பேர் மனுக்களை அளித்தனர். அதன்மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, டிஆர்ஓ பிரியதர்ஷினி உத்தரவிட்டார்.இந்நிலையில், திருவண்ணாமலை தாலுகா, ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை(58) என்பவர், மனைவி மற்றும் மாற்றுத்திறனாளியான மகனுடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசப்படுத்தினர். அங்கிருந்து ஆட்டோவில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின்னர், விவசாயி ஏழுமலையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தெரிவித்ததாவது:எனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர், விலைக்கு கேட்டார். அதை தர மறுத்துவிட்டேன். எனவே, என்னை பழிவாங்க திட்டமிட்டார்.

தொடர்ந்து மிரட்டினார். முறையான மருத்துவ பயிற்சி பெறாத போலி டாக்டரான செல்வகுமார் என்பவர், என்னுடைய மாற்றுத்திறனாளி மகனுக்கு கடந்த ஆண்டு  தவறான ஊசி போட்டு உடல் நலனை மேலும் பாதிக்க செய்துவிட்டார். இதுகுறித்து, போலீசில் புகார் அளித்துள்ளேன். ஆனால், அவர் போலி டாக்டர் என்பதற்கான ஆதாரம் இல்லை என தெரிவித்து, கைது செய்யாமல் விட்டுவிட்டனர். எனவே, கலெக்டர் அலுவலகத்திலும் இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்துள்ளேன். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.
 இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி: - ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. ஆர்டிஓ தனலட்சுமி தலைமையில் நடந்த குறைத்தீர்வு கூட்டத்தில், நேர்முக உதவியாளர் பெருமாள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில், ஆர்டிஓ தனலட்சுமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குடிநீர் வசதி, பட்டா மாற்றம், பட்டா ரத்து, முதியோர் உதவித்தொகை, சிறுவணிக கடன், கோயில் புனரமைப்பு செய்தல், குடும்ப அட்டை, பசுமை வீடு உள்ளிட்ட 80 கோரிக்கை மனுக்களை விசாரித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அப்போது, அரசு துறை அதிகாரிகள்கலந்து கொண்டனர்.

Tags : People's Grievance Meeting ,Tiruvannamalai , Thiruvannamalai: Due to previous enmity due to land dispute, disabled son was given wrong injection and his health was affected.
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 730 பள்ளி வாகனங்களின் தரம் தணிக்கை