×

'நீர்த்தாரைகள்'எனப்படும் அதிசய நிகழ்வு: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் நீரை உறிஞ்சும் மேகம்.!

விழுப்புரம்: கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும். மரக்காணம் அருகே உள்ள ஆலம்பாறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். சுமார் 5 கி.மீ. தூரம் வரை அவர்கள் கடலுக்குள் சென்றிருக்கின்றனர். அப்போது திடீரென வானம் இருண்டு இரவு போல மாறியது.

இதனால் எச்சரிக்கையான மீனவர்கள், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என பயந்துள்ளனர். அந்த சமயத்தில், மிகப்பெரிய ராட்சத மேகங்கள் வானில் இருந்து ஒன்றுபோல கடலில் இறங்கியுள்ளது. கடல் நீரை உறிஞ்சிய மேகங்கள் கடலுக்குள் விழுந்த மேகங்கள் அடுத்த நொடியே ஒரு பெரிய சுழலாக உருவெடுத்து, கடல் நீரை அப்படியே உறிஞ்சி குடித்துள்ளன. இந்த விசித்திரக் காட்சியை கண்டு மெய்சிலிர்த்த மீனவர்கள், அதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

சுமார் அரை மணிநேரம் கடல் நீரை உறிஞ்சிய மேகங்கள், பின்னர் கலைந்து சென்றுவிட்டன. இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது, கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும். பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்.


Tags : Vilappuram District Marakanam , Miraculous phenomenon known as 'Neetertharaigal': A cloud absorbing sea water near Marakanam in Villupuram district.
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள்...