புத்தாண்டு கொண்டாத்தில் விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: சென்னை காவல்துறை ஆணையர் எச்சரிக்கை

சென்னை: புத்தாண்டு கொண்டாத்தில் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் சைபர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றிபெற்ற மானவர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர்; இந்திய பெருநகரங்களில் சென்னையில் மட்டுமே குற்றச்சம்பவங்கள் குறைவு என்று தெரிவித்தார். மேலும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவு என்றும், சென்னையில் பெண்கள் பாதுகாப்பாகவும் அவர் கூறினார்.

சென்னையில் புகார் செய்யப்படும் சைபர் கிரைம் களை பொறுத்தவரை, பெரும்பாலானவை வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுடன் தொடர்புடையவை என்று அவர் தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாகவும், அப்போது விதிமுறைகள் அறிவுறுத்தப்படும் என்றும், புத்தாண்டு கொண்டாட்டங்களில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்தார்.

Related Stories: