சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 30-ம் தேதி சுற்றுலா பொருட்காட்சி தொடங்குகிறது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 30-ம் தேதி சுற்றுலா பொருட்காட்சி தொடங்குகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகளை அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை கவரும் வகையில் அனைத்து அம்சங்களும் சுற்றுலா பொருட்காட்சியில் இடம் பெற உள்ளன. சென்னை தீவுத்திடலில் திட்டமிட்டபடி பொருட்காட்சி தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் டிசம்பர் 30-ம் தேதி சுற்றுலா பொருட்காட்சி தொடங்குகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய, மாநில அரசுகளின் துறைசார் அரங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பொருட்காட்சியில் பொழுது போக்கு அம்சங்களுடன் சிறுவர்களை கவரும் வகையில் பல புதிய விளையாட்டு சாதனங்கள், ராட்சத ராட்டினங்கள், சிறுவர் ரயில் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. அரசு செயல்படுத்தி வரும் சிறப்புத் திட்டங்கள் பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அரசின் அரங்குகள் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 நாட்கள் நடைபெற உள்ள இந்த பொருட்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Related Stories: