ராஜாஜியின் 50-வது நினைவு ஆண்டு முத்தமிழறிஞரின் வழியில் மூதறிஞருக்கு மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

சென்னை: ராஜாஜியின் 50-வது நினைவு ஆண்டு அரசு விழா எடுத்தும், இன்றைய  தலைமுறையினரும் அவரது வரலாற்றை அறிந்து கொள்ளும்  வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி அமைத்தும்  முத்தமிழறிஞரின் வழியில் மூதறிஞருக்கு மரியாதை செய்துள்ளோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில்: விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம், ஆட்சி நிர்வாகம், இலக்கியம் எனப் பல தளங்களிலும் பங்களித்ததோடு, அரசியல் சார்புகளைக் கடந்து அனைவரோடும் நட்புறவைப் பேணியவர் ராஜாஜி அவரது வரலாற்றின் வழியே தமிழ்நாட்டு அரசியலின் போக்கையும் திசைமாற்றத்தையும் அறிந்து கொள்ளலாம்.

விடுதலைப் போராட்டத்தில் ராஜாஜி பங்களிப்புக்காக இந்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை நேரில் சென்று வழங்கியும், அவருக்கு கிண்டியில் நினைவாலயம் அமைத்தும் அவரைப் போற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர். தற்போது, ராஜாஜியின் 50-வது நினைவு ஆண்டையொட்டி அரசு விழா எடுத்தும், இன்றைய தலைமுறையினரும் அவரது வரலாற்றையும் பங்களிப்புகளையும் அறிந்து கொள்ளும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி அமைத்தும் முத்தமிழறிஞரின் வழியில் மூதறிஞருக்கு மரியாதை செய்துள்ளோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார்.

Related Stories: