சி.வி.சண்முகம் சொந்த மாவட்டத்தில் இபிஎஸ் படத்தை அழிப்பதை போன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது: விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி் சாமியின் புகைப்படங்களை அழிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியேர் இணைந்து செயல்பட்டாலும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பேச்சால் மீண்டும் அவர்களுக்கிடையே வெளிப்படையாகவே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஓபிஎஸ்சை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வுசெய்யப்பட்டார். இந்தவழக்கில் நீதிமன்றமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான தீர்ப்பைஅளித்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஓபிஎஸை நீக்கம் செய்தபோது, எடப்பாடிபழனிசாமி தரப்பினர் தமிழகம் முழுவதும் கட்சிஅலுவலங்களில் அவரின் புகைப்படங்கள், பெயர்களை அகற்றினர். அதன்படி விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகங்களிலும் ஓபிஎஸ் புகைப்படங்கள், பெயர்கள் அழிக்கப்பட்டது.

இந்நிலையில், எடப்பாடிக்கு முதுகெலும்பாக இருந்துவரும் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் அழிப்பதை போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்றுமுன்தினம் முதல் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறுகையில், தற்போது வைரலாகி வரும் படங்கள் மார்பிங் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் புகைப்படங்களை அழிக்கும்போது எடுத்தப்படங்கள் தற்போது, அருகில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களையும் அழிப்பதைப்போல் மார்பிங் செய்து சமூகவலை தளங்களில் வைரலாக்கியுள்ளனர். அண்மையில் இபிஎஸ் உடன் மனக்கசப்பினால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒதுங்கியிருப்பதாக தகவல் பரவியதையடுத்து, யாரோ சிலர் இந்த வேலையை பார்த்துள்ளனர், என கூறியது.

Related Stories: