×

பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: ராணுவ கேப்டன் உட்பட 5 வீரர்கள் பலி

இஸ்லாமாபாத்: பலுசிஸ்தானில் நடந்த வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ராணுவ கேப்டன் உட்பட 5 வீரர்கள் பலியானதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில்  தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஐந்து இடங்களில் நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கேப்டன் உட்பட 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் வெளியிட்ட தகவலின்படி, ராணுவ கேப்டன் ஃபஹத், லான்ஸ் நாயக் இம்தியாஸ், சிபாய் அஸ்கர், சிப்பாய் மெஹ்ரான், சிப்பாய் ஷாமூன் உட்பட 5 வீரர்கள் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பினரால் கொல்லப்பட்டனர். இத்தகைய கோழைத்தனமான செயல்களை அனுமதிக்கமாட்டோம். பலுசிஸ்தானின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது. உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Tags : Balochistan , Blast in Balochistan: 5 soldiers including army captain killed
× RELATED சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு...