மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி மறைவுக்கு அமைச்சர் சாமிநாதன் இரங்கல்

சென்னை: சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள்வயிற்றுப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையார் மறைவுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தியும், தமிழில் மிகவும் புலமைப் பெற்றவரும் மற்றும் இசையாசிரியருமான லலிதா பாரதி அம்மையார் அவர்கள் (94) வயது முதிர்வின் காரணமாக இன்று (26.12.2022) இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.

அன்னாரது மறைவு தமிழுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: