×

கார் விபத்தில் சிக்கியதால் பாஜக எம்எல்ஏவுக்கு எலும்பு முறிவு

புனே: மகாராஷ்டிரா மாநிலம் மான் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜெய்குமார் கோர், அவரது உதவியாளருடன் மால்தான் அடுத்த புனே-பந்தர்பூர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பாலத்தில் இருந்து இறங்கும் போது, அங்கிருந்த பள்ளத்தில் கார் இறங்கியதால் விபத்துக்குள்ளானது. அதனால் எம்எல்ஏ ஜெய்குமார் கோர், அவரது உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

மூவரும் புனே ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்எல்ஏவுக்கு மார்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மேல் சிகிச்சைக்காக பாராமதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : BJP ,MLA , BJP MLA fractured in car accident
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...