டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல்; இந்தியாவின் நம்பிக்கைக்கு ஷ்ரேயாஸ் மிகவும் முக்கியம்: முகமது கைப் கருத்து

மும்பை: இந்தியாவின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நம்பிக்கைக்கு மிடில் ஆர்டர் பேட்டர் ஸ்ரேயாஸ் அய்யர் மிகவும் முக்கியமானவர் என்று முன்னாள் இந்திய பேட்டர் முகமது கைப் தெரிவித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் நான்காவது நாளில் சிறந்த திறமையை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு ஆட்டத்தை வெல்வதற்கு அவர் பாராட்டினார்.

வங்கதேச சுழற்பந்து  வீச்சாளர்களை  எதிர்கொண்டு சிறப்பாக  வெற்றி பெறுவதற்கு திறமைகளை வெளிப்படுத்தினார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடருக்கு இது முக்கியமானது, என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: