×

ஆற்காடு அருகே சுகாதாரத்துறையினர் அதிரடி புகையிலை பொருட்கள் விற்ற 6 கடைகளுக்கு அபராதம்

ஆற்காடு :  ஆற்காடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 6 கடைகளுக்கு நேற்று சுகாதாரத்துறையினர் அதிரடியாக ₹900 அபராதம் விதித்து வசூலித்தனர்.
ஆற்காடு  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ரவி, நிஷாந்த், ஜெயக்குமார், தமிழ்ச்செல்வன் மற்றும் சுகாதாரக் குழுவினர் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொது இடங்களில் புகை பிடித்த, புகை பிடிக்க அனுமதித்த மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள்  விற்ற வியாபாரிகள் உட்பட 6 பேருக்கு  அபராதம் விதித்து ₹900 வசூலித்தனர்.

 மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க கூடாது. புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

Tags : Arcot , Artgad: Yesterday, the Health Department fined ₹900 to 6 shops selling banned tobacco products near Artgad.
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்