×

புலிவெந்துலா சிஎஸ்ஐ தேவாலயத்தில் முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

திருமலை :  புலிவெந்துலா சிஎஸ்ஐ தேவாலயத்தில் முதல்வர் ஜெகன்மோகன் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தனது தாயார் விஜயம்மா, மனைவி பாரதி ஆகியோருடன் கடப்பா மாவட்டம்  இடுபுலப்பாயாவில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு புலிவெந்துலா சென்றார். தொடர்ந்து, அங்குள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில்   கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில்  பங்கேற்றார்.

இதில், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் எம்பி அவினாஷ், துணை முதல்வர் அம்ஜத் பாஷா உள்ளூர் மக்களுடன் இணைந்து  கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்றனர். பின்னர், கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி சிஎஸ்ஐ தேவாலயத்தின்  புத்தாண்டு காலண்டர் வெளியிடப்பட்டது.கிறிஸ்துமஸ் விழா முடிந்ததும், முதல்வர் ஜெகன் மோகன் புலிவெந்துலாவில் இருந்து புறப்பட்டு கடப்பா விமான நிலையம் சென்று அங்கிருந்து சிறப்பு விமானத்தில் கன்னவரம் சென்றார்.

Tags : Christmas ,CM ,Jaganmohan ,Pulivendula CSI Church , Tirumala: Chief Minister Jaganmohan along with his family participated in Christmas special prayers at Pulivendula CSI Church.
× RELATED குமரியில் வண்ண, வண்ண ஸ்டார்கள்...