×

கோவை மாவட்டம் உக்கடம் களக்காடு பகுதியில் 2வது நாளாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை மாவட்டம் உக்கடம் களக்காடு பகுதியில் 2வது நாளாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது வருகின்றனர். கோவையில் என்.ஐ. ஏ அதிகாரிகள் 2வது நாளாக, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள், வீடுகளுக்கு கைது செய்யப்பட்ட நபர்களை நேரில் அழைத்து சென்று வந்து அவர்கள் எங்கே  நின்று பேசியுள்ளனர், மற்றும் யார் யாரிடம் பேசினார்கள் யாருடைய தொடர்பு இருக்கிறது இது போன்ற விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு வந்து அவர்களை ஒரே இடத்தில் அங்கு நின்று பேசக்கூடிய இடங்கள் என்று அவர்களுடைய புகைப்படங்களை எடுத்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டும் அல்லாமல் இந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் 9 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.  முதல் கட்டமாக 5 பேரை என்.ஐ ஏ. அதிகாரிகள் நேற்று முந்தைய தினம் கோவை அழைத்து வந்தார்கள். அவர்கள் பி.ஆர்.எஸ் அலுவலகத்தில் அவர்கள் 2 நாட்களாக வைத்து, இந்த சம்பவத்தின் தொடர்பான இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை புகைப்படங்கள் எடுப்பது போன்ற பணிகளில் என்.ஐ. எ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கு பாதுகாபாக கோவை மாநகர போலீசார் துப்பாக்கி கொண்ட காவல் துறையினர் பாதுகாப்பு கொடுத்து இருக்கிறார்கள். இந்த விசாரணையில் இதற்கு முன்னர் இருந்த நபர்கள் யார், வேறு யாராவது இருக்கிறார்களா என்ற விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகிவந்துள்ளது.

இதற்கு கரணம் அக்டோபர் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு வெடித்த கார் சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிர் இழந்து இருக்கிறார். அதன் பின்பு இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று அது மட்டும் இன்றி இதன் மூளை பின்னணியாக இருக்கக்கூடிய நபர் யாராவது வெளியே இருக்கிறார்களா இல்லை என்றால் இவர்களுக்கு செயல் திட்டம் கொடுத்தவர்கள் யாரவது இருக்கிறார்களா என்ற கோணத்தில் இவர்களை நேரில் அழைத்து வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரி தரப்பில் செய்திகள் தெரிவித்து இருக்கிறார்கள். 


Tags : NIA ,Ukkadam Kalakadu ,Coimbatore , NIA officials are investigating for the 2nd day in Ukkadam Kalakadu area of Coimbatore district
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!