×

கிறிஸ்துமஸ் விழா கோலாகலம் தேவாலயங்களில் விடியவிடிய சிறப்பு பிரார்த்தனை

சிவகங்கை/காரைக்குடி : சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கிறிஸ்துமஸ் பிரார்த்தனை திருப்பலிகள் நடந்தன.
சிவகங்கையில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் பங்குத்தந்தை சேசுராஜ் தலைமையில் நடந்த திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சிவகங்கை அருகே வல்லனி ஆலயத்தில் பங்குத்தந்தை லூர்துராஜ் தலைமையில் நடந்த திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மானாமதுரை அருகே புகழ்பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி திருப்பலி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் சூசைஆரோக்கியசாமி தலைமையில் நடந்த திருப்பலி மற்றும் பள்ளித்தம்பம் புனித மூவரசர்கள் ஆலயத்தில் நடந்த திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நாட்டரசன்கோட்டை அன்னை வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா ஆலயம், காரைக்குடி சகாயமாதா ஆலயம், தேவகோட்டை உலக மீட்பர் ஆலயம், சகாய மாதா ஆலயம், சருகணி திரு இருதய ஆண்டவர் ஆலயம், புலியடிதம்பம் அடைக்கல அன்னை ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

காரைக்குடி செக்காலை தூய சகாயமாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை எட்வின்ராயன் தலைமையில் நடந்தது. உதவி பங்குத்தந்தை ஜேமஸ்ராஜா, முன்னாள் உதவி பங்குத்தந்தை பினோட்டன், திருத்தொண்டர் மரிய அந்தோணிராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இயேசு பிறப்பு குறித்து குடில் விடியல் இளையோர் இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்தது. அரியக்குடி வளன்நகர் குழந்தை யேசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய சகாயராஜ் தலைமையிலும், ஆவுடையப்பொய்கை தூய அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையிலும், மானகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜூடு தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.

செஞ்சை குழந்தை தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. கிறிஸ்துவ தமிழ் ஆய்வு மைய இயக்குநர் அருள்முனைவர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.டி.இ.எல்.சி குளோப்சர்ச்சில் கிறிஸ்து பிறப்பின் அதிகாலை ஆராதனை நடந்தது. உபதேசியார் நவராஜ் உமாகாந்தி வரவேற்றார். பிறப்பின் நற்செய்தியை போதகர் ஆண்ட்ரூஸ் வழங்கினார்.

இன்பராஜ் ரிச்சர்ட்ஸ் பாடகர் குழுவை வழிநடத்தினார். அனுஜ்தாமஸ் இசையமைக்க பிறப்பின் பாடல்கள் பாடப்பட்டது. ஆராதனை ஏற்பாடுகளை சாமுவேல் செல்வராஜ், ஆசிரியர் ஹென்றிபாஸ்கர் மார்ட்டின், வால்டன் செய்திருந்தனர். ஆராதனையில் டாக்டர் பிரெட்ரிக்ஜான், கிறிஸ்டினாள், எடிசன்எட்வின் தம்புராஜ், மரியதாஸ், தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Christmas Festival ,Kolagalam Churches , Sivagangai/Karaikudi: Christmas in all churches in Sivagangai district from midnight yesterday to yesterday morning.
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை