ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேருக்கு வலை

திருவள்ளூர்: மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ரயில் நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்தியதை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளர் கோலகட்லா பிச்சை ரெட்டி மீது தாக்குதல் நடத்தினர். ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: