சுனாமி நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த சென்ற கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் கார் விபத்து..!

சென்னை : சென்னை பட்டினம்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளையொட்டி கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்த வருகை தந்தபோது எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. சென்னை பட்டினமைப்பாக்கம் சுனாமி நினைவு நாளையொட்டி கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்தார். அப்பொழுது அவர் கார் மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குளானது.

இதில் சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. அதிர்ஷ்டவசமாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எந்த விதத்தில் காயங்களும் இன்றி தப்பினார். தாமாகவே சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். இந்நிலையில் தகவலறிந்து வந்த காவல் துறையினர் விபத்து ஏற்பட்ட இடத்தை சரி செய்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் சுனாமி தினத்தை ஒட்டி பட்டினப்பாக்கத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: