×

ஆஸி-தெ.ஆப்ரிக்கா இடையே 100வது டெஸ்ட் இன்று தொடக்கம்

மெல்போர்ன்: ஆஸியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெ.ஆப்ரிக்கா 3ஆட்டங்களை  கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸி 2வது நாளே 6விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 2வது டெஸ்ட் ஆட்டம் இன்று மெல்போர்னில்  தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்கு மறுநாள் தொடங்கும் விளையாட்டுப் போட்டிகள்  நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க நாடுகளில் ‘பாக்சிங் டே’ விளையாட்டு என்று அழைக்கப்படும்.

அதனடிப்படையில் இன்று ஆரம்பிக்கும்.  ‘பாக்சிங் டே டெஸ்ட்’ இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இன்று தொடங்கும் டெஸ்ட்டை வென்றால் ஆஸி தொடரையும் கைப்பற்றும். தென் ஆப்ரிக்கா வென்றால் தொடரை சமநிலைக்கு கொண்டு வருவதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்கும். அதை விட சிறப்பு என்னவென்றால் இது 2 அணிகளுக்கும் 100வது டெஸ்ட் மோதல். அதனால் தங்களுக்கு இடையிலான 100 டெஸ்ட் ஆட்டத்தில் வெல்வது 2 அணிகளுக்கும் மிகவும் அவசியமானது.

அதனால் டீன் எல்கர் தலைமையிலான தெ.ஆப்ரிக்காவும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸியும் வெற்றிக்கு வரிந்துக் கட்டும். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

டெஸ்ட் 100!
ஆஸ்திரேலியா- தென் ஆப்ரிக்கா இடையே இது 100 டெஸ்ட் ஆட்டமாகும்.  
இந்த 2 அணிகளும் 1908ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றன.
இதற்கு முன் நடந்த 99 டெஸ்ட்களில்  ஆஸி 53லும், தெ.ஆப்ரிக்கா 26லும் வென்றுள்ளன. எஞ்சிய 20 ஆட்டங்கள் டிரா, முடிவை எட்டாதது, கை விடப்பட்டது என பலவேறு வகைகளில் நிறைவடைந்துள்ளன. ஆஸி அணி வீரர் டேவிர் வார்னருக்கும் இது 100டெஸ்ட் ஆட்டமாகும்.

Tags : Te ,Africa , Australia v South Africa, 100th Test
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...