×

சென்னையில் ஒரு வார சோதனை குட்கா விற்ற 73 பேர் கைது: 2,343 கிலோ மாவா, ரூ.7,750 பறிமுதல்

சென்னை: சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக கடந்த ஒரு வாரத்தில் 73 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,343 கிலோ மாவா, ரூ.7,750 மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது  செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், போலீசார் தீவிர சோதனை நடத்தி, போதை பொருட்கள் விற்பனையை தடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில்,  குட்கா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்ததாக 70 வழக்குகள் பதிவு செய்து 73 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகளும், 2,343 கிலோ மாவா, ரூ.7,750 பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்பாக, திருவொற்றியூர் நெடுஞ்சாலை எம்ஆர்அப் வாகன சோதனை சாவடி அருகே ஆட்டோவில் மாவா தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களை கடத்திய எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சுமதி (47), மணலி பாரதியார் தெருவை சேர்ந்த வினோத்குமார் (32), பரத்குமார் (31) ஆகியோரை கைது செய்து, மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான 1,340 கிலோ கொட்டை பாக்கு, 470 சிலோ சீவல் பாக்கு, 100 கிலோ ஜர்தா, 432 கிலோ சுண்ணாம்பு என மொத்தம் 2,343 கிலோ மாவா தயாரிக்க பயன்படும் மூலம்பொருட்கள், 3 கிரைண்டர்கள், 1 எடை மெஷின், 1 பேக்கிங் மெஷின், 3  செல்போன்கள், ரூ.7,750 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Chennai , Chennai, raid, Gutka sale, arrest
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...