×

உலக டென்னிஸ் லீக் ஹாக்ஸ் அணி வெற்றி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக முன்னணி டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் அணி அணியாக  பங்கேற்ற  ‘உலக டென்னிஸ் லீக்’ போட்டி நடந்தது.  வீரர்கள், வீராங்கனைகள் மொத்தம் 4 அணிகளாக பிரிக்கப்பட்டனர். ஃபால்கான்ஸ் அணியில் ஜோகோவிச்(செர்பியா), சபலென்கா(பெலாரஸ்), திமிட்ரோவ்(பல்கேரியா), படோசா(ஸ்பெயின்),  ஈகிள்ஸ் பிரிவில்  கியோர்ஜிஸ்(ஆஸி),  கார்சியா(பிரான்ஸ்),  செப்பி(இத்தாலி), பியான்கா(கனடா), போபண்ணா(இந்தியா) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

அதேபோல்  கைட்ஸ் பிரிவில்  ஃபெலிக்ஸ்(கனடா), ஸ்வியாடெக்(போலாந்து),  ஹோல்கர்(டென்மார்க்), சானியா(இந்தியா),  செபாஸ்டியன்(ஆஸ்திரியா),   யூஜின்(கனடா) ஆகியாரும், ஹா்க்ஸ் பிரிவில்  ஸ்வெரவ்(ஜெர்மனி) ரைபாகினா(கஜகிஸ்தான்), தியம்(ஆஸ்திரியா), அனஸ்டஸியா(ரஷ்யா) ஆகியோர் இருந்தனர். டிச.19ம் தேதி முதல் ஒற்றையர்,  இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களாக  போட்டி நடத்தப்பட்டது. லீக் சுற்று முடிவில்  முதல் 2 இடங்களை பிடித்த  ஹாக்ஸ்-கைட்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில் ஹாக்ஸ்  அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Tags : World Tennis League Hawks , World Tennis League, Hawks, win
× RELATED 20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான...