ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு:  கிறிஸ்துமஸ் விழா மற்றும் பள்ளி  மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையால், பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்தும் நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் குவிந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.

Related Stories: