×

மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் நல்லகண்ணு நூறாண்டுகள் கடந்து வாழ வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை: தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடி வரும்  நல்லகண்ணு நூறாண்டுகளையும் கடந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும், தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவருமான முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு 98ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

25 ஆண்டுகள் விவசாய தொழிலாளர் சங்கத் தலைவராகவும், 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் சிறப்பாக கடமையாற்றிய நல்லகண்ணு, பல்வேறு அடக்குமுறைகளை, சிறைத் தண்டனைகளை எதிர்கொண்ட போராளித் தலைவர். நதிநீர் உரிமைகளுக்காகவும், சுற்றுச் சூழலைக் காப்பாற்றவும், மணற் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும் தொடர்ந்து போராடிக் கொண்டு வருபவர் தான் நல்லகண்ணு. இத்தகைய அரும்பெரும் குணங்களை பெற்று, தமிழகத்தின் மூத்த தலைவராக திகழ்ந்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் நல்லகண்ணு நூறாண்டுகளையும் கடந்து வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

* துரை வைகோ நேரில் வாழ்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நேற்று நல்லகண்ணு இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Nallakann ,Vigo , Nallakann, who has been voicing people's rights, should live through the centuries: Vigo report
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்