×

சங்பரிவார்களை அடையாளம் காண்பது சமூக நல்லிணக்கத்தின் தேவை: தொல்.திருமாவளவன் பேச்சு

அருமனை: குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் சமூக நல்லிணக்க மாநாடு நடந்தது.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமை வகித்து பேசுகையில், நாம் யாருக்கும் எந்த சமூகத்திற்கும்,  மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை. மதத்தை வழிநடத்துகின்றவர்கள் அன்பை  போதிப்பவர்களாக உள்ளனர். ஆனால் சங் பரிவார் போன்றவர்கள்தான் தங்களின்  அரசியல் ஆதாயத்துக்கு, தாங்கள் விரும்பும் சமூகத்தை கட்டமைக்க மதங்களுக்கு  இடையே வெறுப்பை வளர்க்கிறார்கள்.  சங்பரிவாரில்  30க்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒற்றை இலக்குடன் வெவ்வேறு பெயர்களில்  இயங்குகின்றன.

அவர்களின் ஒரே இலக்கு ஆர்எஸ்எஸ் நோக்கத்தை  செயல்படுத்துவதுதான். சங் பரிவார்களை அடையாளம்  காண்பது சமூக நல்லிணக்கத்தின் தேவையாக உள்ளது, என்றார். இந்திய  கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், நமது அரசியலமைப்பு  சட்டம் நம்மை வழிநடத்துகிறது. அந்த சட்டம் நீ எந்த மதத்தை விரும்புகிறாயோ  அந்த மதத்தை ஏற்றுக்கொள் என்கிறது, யாரும் யார் மீதும் நிர்ப்பந்தம்  செய்யக்கூடாது. மதச்சார்பின்மைதான்  இந்த நாட்டின் அடிப்படை கொள்கை.

மதசார்பின்மை என்ற கொள்கையை காந்தி  வலியுறுத்திய ஒரே காரணத்துக்காக ஆர்எஸ்எஸ்ஐ சேர்ந்தவர் காந்தியை சுட்டுக்கொன்றார். அவர்கள்தான் இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள்’  என்றார். விஜய்வசந்த் எம்.பி, திமுக மாநில மகளிர் அணி செயலாளர்  ஹெலன்டேவிட்சன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், பெங்களூரு  ராபாட் கிறிஸ்டோபர், இந்திய குடியரசு  கட்சி தமிழக தலைவர் சூசை, தமுமுக காதர் மைதீன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.


Tags : Sangbarivar ,Thirumavalavan , Identifying Sangh Parivars as a Need for Social Harmony: Thol. Thirumavalavan Speech
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு