×

பாக். தேர்வு குழு தலைவராக அப்ரிடி நியமனம்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால தேர்வுக் குழு தலைவராக, முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில், பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஹாட்ரிக் தோல்வியுடன் ஒயிட்வாஷ் ஆனது. சொந்த மண்ணில் கிடைத்த இந்த படுதோல்வியை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டதுடன் 14 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.

தேர்வுக் குழு தலைவர் முகமது வாஸிம் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில், இடைக்கால தேர்வுக் குழு தலைவராக முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வீரர்கள் அப்துல் ரசாக், ராவ் இப்திகார் ஆகியோர் தேர்வுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ‘இந்த புதிய பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவம். பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்.

தகுதியான, திறமை வாய்ந்த வீரர்களைத் தேர்வு செய்து, அணி சிறப்பாக செயல்பட உதவுவோம்’ என்று அப்ரிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2017ல் ஓய்வு பெற்ற அவர், பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட், 398 ஒருநாள் மற்றும் 99 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Tags : Pak. Afridi , Pak. Afridi appointed as selection committee chairman
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1