
மிர்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் நேற்று இக்கட்டான நேரத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன் எடுத்து அணியை காப்பாற்றினார். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் அவர் கூறியதாவது: நான் சவால்களை நேசித்து முன்னேறுகிறேன். 4 விக்கெட்டுக்கு 94 ரன் என்ற நிலையில் களம் இறங்கியபோது அழுத்தம் இருந்தது. இதுபோன்ற இடத்தில் தான் ஆட விரும்பினேன்.
பன்ட் என்னை அமைதிப்படுத்தினார். அது முக்கியமானதாக இருந்தது. நாங்கள் 170 என் எடுத்தோம். அது முக்கியமானது. பன்ட்டிடம் நான் ஆலோசனை கூறி அவருடைய கவனத்தை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் அமைதியாக இருந்தார் மற்றும் சரியான பந்துவீச்சாளர்களை குறிவைத்தார். எங்கள் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. நாம் சரியான அளவில் பந்துவீச வேண்டும், என்றார்.