பாஜகவில் அண்ணாமலை இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டது: நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்

சென்னை: பாஜகவில் அண்ணாமலை இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவில் நிலவும் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்த காயத்ரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார். வீடியோ, ஆடியோ பிரச்சனை குறித்து அண்ணாமலையிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவில் நீடிக்கும் வீடியோ, ஆடியோ கலாச்சாரத்தால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.

வீடியோ கலாச்சாரம்: பாஜக மீண்டும் விசாரிக்க கோரிக்கை

தமிழக பாஜகவில் நிலவும் பிரச்சனை குறித்து தேசிய தலைமை நடவடிக்கை எடுக்க நடிகை காயத்ரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார். பாஜகவில் இருப்போர் தங்களை காப்பாற்றிக் கொள்ள மற்றவர்களை திமுகவின் ஸ்லீப்பர் செல் என விமர்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது.

இப்போது அண்ணாமலை ஜி, சவுக்கு சங்கரையும் மாதேஷையும் சந்தித்தாரா.. பிறகு திமுகவுடன் தொடர்பில் இருக்கிறாரா? சவுக்கு சங்கர் அவர்களை மலமாடு என்றும் ஆடு என்றும் அழைத்தார். இப்போது அவர் அவர்களிடம் சரணடைந்தார். சவுக்கு கனிமொழி அக்காவின் முழு ஆதரவு. டேவிடன் மாடலாக மாறியது யார்? என்று கேள்வி எழுப்பிய அவர், முதலில் பதில் பிறகு குற்றம் சொல்லலாம். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தலைப்புகளை திசை திருப்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: