×

நாகூர் தர்காவில் 466ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: பக்தர்கள் வருகையால் விழாக்கோலம்..!!

நாகப்பட்டினம்: புகழ் பெற்ற நாகூர் தர்காவில் 466ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. நாகூரில் உள்ள பிரசித்திபெற்ற தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று இரவு தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு நாகையில் இருந்து முக்கியவீதிகள் வழியாக கொடி ஊர்வலம் நடைபெறுகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழாவின் தொடக்க நிகழ்வாக நாகையில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேரூந்துகளையும் அரசு இயக்கியிருப்பதால், பேருந்துகள், ரயில்கள் மூலம் ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் தர்காவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் நாகூர் தர்கா, பீர்மண்டபம், பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வதற்காக நாகை எஸ்.பி ஜவகர் தலைமையில் 1080 காவலர்கள் 150 ஊர்க்காவலர்கள் சுழற்சிமுறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Tags : 466th Kanduri Festival ,Nagur Dargah ,of the arrival of devotees , Nagore, Ganduri Festival, Flag Hoisting, Festival Kolam
× RELATED உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466-வது...