×

எம்.ஜி.ஆர் 35வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அதிமுக.,வினர் மலர் தூவி மரியாதை

சென்னை: எம்.ஜி.ஆர் 35வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அதிமுக.,வினர் மற்றும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக., இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பொன்னையன், செங்கோட்டையன், வைகை செல்வன், வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Tags : MM GG ,Memorial Day of R. ,Vinar ,Sparkle , On the occasion of MGR's 35th death anniversary, AIADMK, Vinar laid floral tributes at his memorial.
× RELATED அண்ணாமலை அரசியல் சட்டத்தை...