×

பரங்கிமலையில் கிறிஸ்துமஸ் விழா சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரண் திமுக: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக, சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பரங்கிமலை மான்போர்ட் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் செ.ஆல்பர்ட் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன்,  ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் வந்தேமாதரம், ஜி.கே.விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்டோண்மென்ட் பகுதி திமுக செயலாளர் டி.பாபு வரவேற்றார்.

விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, 1000 பேருக்கு புத்தாடைகளுடன், தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் தான் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. சிறுபான்மை நல வாரியம் அமைக்கப்பட்டது. கலைஞர் வழியில் ஆட்சி நடத்துகின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித யாத்திரை செல்பவர்களுக்கு ரூ.37 ஆயிரமும், அருட் சகோதரிகளுக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், பழமையான 3 தேவாலாயங்களை புதுப்பிக்க தலா ரூ.2 கோடி வழங்கப்பட்டது. அதன்படி, புனித தோமையர்மலை தேவாலயத்திற்கு இந்த ஆண்டு ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் பாதுகாப்புடன் இருக்க கூடிய ஒரே மாநிலம் தமிழகம் தான். எந்த பிரச்னை வந்தாலும், திமுக முன் நின்று பாதுகாக்கும் அரணாக நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், எம்எல்ஏக்கள் பல்லாவரம், இ.கருணாநிதி, வரலஷ்மி மதுசூதனன், முன்னாள் எம்எல்ஏக்கள் மீ.அ.வைதியலிங்கம், தமிழ்மணி, மறைமலைநகர் நகராட்சி தலைவர் ஜெ.சண்முகம், கிறிஸ்தவ பாதிரியார்கள், ஸ்டீபன்சேவியர், சைலாக்ஸ்டீபன், மைக்கேல், அருட் சகோதரி லின்சி, இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த அசன்அம்பலம் மற்றும் திமுக நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், பட்ரோடு ஜி.ராஜ், சுனில் கண்ட்ரோன்மெண்ட் சி.முத்து, ராமு, கே.சி.எஸ்.ராஜேந்திரன், கோ.பிரவீன்குமார், சுலைமான், ஜெ.நடராஜன், கே.ஆர்‌.ஜெகதீஸ்வரன், ஏசுதாஸ், கலாநிதி குணாளன், தீபக், கார்த்திக், காஜா மொய்தீன், விவேகானந்தன், தினகரன், ஜி.கே.வி.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Christmas Festival ,Parangimalai Minority ,Protection Aran ,Minister ,T. Moe Andarasan , Christmas festival in Parangimalai DMK is a bulwark of minority people's protection: Minister Thamo Anparasan's speech
× RELATED சிலுவைபுரத்தில் கபடி போட்டி