தாம்பரம் சீயோன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா: பால் தினகரன் பங்கேற்பு

தாம்பரம்: தாம்பரம் அருகே மப்பேடு பகுதியில் உள்ள சீயோன் பள்ளியில், சீயோன் மற்றும் ஆல்வின் பள்ளிகளின் தலைவர் விஜயன் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன், அவரது மனைவி இவாஞ்சலின் பால் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழா குறித்து பிரசங்கம் செய்தனர். விழாவில், சீயோன் பள்ளி மாணவர்கள் வில்லுப்பாட்டு மூலம் கிறிஸ்துமஸ் விழா குறித்து அனைவருக்கும் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து இயேசு பிறந்தநாள் குறித்த பாடல்கள் பாடியும், நடனமாடியும், நாடகங்கள் நடித்துக் காட்டினர். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் இயக்குனர்கள் ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரேச்சல் ஜோர் ஜியானா, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: