பேராசிரியர் 100வது பிறந்தநாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம்: மண்டல குழு தலைவர் வழங்கினார்

பல்லாவரம்: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா, பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் அருகே நடந்தது. தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டல குழு தலைவரும், பம்மல் நகர திமுக செயலாளருமான வே.கருணாநிதி தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி, அன்பழகன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து பேசியதாவது: பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாவரத்தில் இருந்து பம்மல் மார்க்கமாக குன்றத்தூர் செல்லும் பிரதான சாலை விரைவிலேயே 100 அடி சாலையாக மாற்றப்படும். அதற்கான பணிகள் யாவும் விரைவில் நடைபெறும். இத்திட்டத்தால் வியாபாரிகள், பகுதிவாசிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கான இழப்பீட்டு தொகை 80 சதவீத இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு பம்மல் மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில், பம்மல் நகர திமுக சார்பில் பிரபு, காளேஸ்வரன், வெண்ணிலா பக்கிரிசாமி, மதினா பேகம், பன்னீர்செல்வம், துரை.இளங்கோவன், கல்யாணி டில்லி, ரம்யா சத்தியபிரபு, சத்தியா மதியழகன், இன்பசேகர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பம்மல் நகர திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: