×

அடையாறு ஆற்றில் குதித்த டிரைவர் சடலமாக மீட்பு

வேளச்சேரி: அடையாறு திரு.வி.க பாலத்தின் மேலிருந்து அடையாறு ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக நேற்று மாலை சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி தற்கொலை செய்து கொண்டவரின் உடலை மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் அடையாறு, காந்திநகர், கெனால் பேங்க் ரோட்டை சேர்ந்த ராஜேஷ் குமார் (45) என்பதும், டிரைவர் வேலை செய்து வந்த இவர், கடந்த 2006ம் ஆண்டு முதல் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜேஷ்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Adyar river , Driver who jumped into Adyar river recovered as dead body
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்