×

என்டிடிவியில் மேலும் பங்குகளை வாங்கும் அதானி

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி செய்தி சேனலான என்டிடிவியின் நிறுவனர்களான பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு சொந்தமான ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் பிரைவேட் நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியது. இதன் மூலம் 37.44 சதவீத பங்குகளுடன் என்டிடிவியை அதானி குழுமம் கைப்பற்றியது. அதன் நிறுவனர்களான பிரணாய், ராதிகா ஆகியோர் 32.26 சதவீத பங்குகளை வைத்திருந்தனர். இந்நிலையில், பிரணாய், ராதிகா ஆகியோர் தங்களிடம் உள்ளதில் 27.26 சதவீத பங்குகளை ரூ.647.6 கோடிக்கு அதானி குழுமத்திடம் விற்க உள்ளனர்.


Tags : Adani ,NDTV , Adani to buy more stake in NDTV
× RELATED அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா...