இந்திய விமானப்படையில் முதன் முறையாக பெண் விமானியாக முஸ்லிம் மாணவி தேர்வு: உ.பி-யில் பெற்றோர் மகிழ்ச்சி

லக்னோ: இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானியாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவி தேர்வாகி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரைச் சேர்ந்த டிவி மெக்கானிக்கின் மகள் சானியா மிர்சா, இந்திய விமானப்படையில் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் நாட்டின் முதல் முஸ்லீம் பெண் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல் விமானியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சானியாவின் தந்தை ஷாகித் அலி கூறுகையில், ‘நாட்டின் முதல் போர் விமானியான அவ்னி சதுர்வேதியை, எனது மகள் சானியா மிர்சா தனது ரோல் மாடலாக கருதுகிறார். ஆரம்பத்தில் இருந்தே அவரை போல் ஆக வேண்டும் என்று விரும்பினார். போர் விமானியாக தேர்வு செய்யப்பட்ட நாட்டின் இரண்டாவது பெண் சானியா மிர்சா என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எங்களது கிராமத்தில் உள்ள பண்டிட் சிந்தாமணி துபே இன்டர் கல்லூரியில் ஆரம்பக் கல்வி முதல் 10ம் வகுப்பு வரை படித்தார்.

அதன் பிறகு, குருநானக் பெண்கள் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் செஞ்சுரியன் டிஃபென்ஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். தேசிய பாதுகாப்பு அகாடமி சார்பில் நடந்த தேர்தவில் வெற்றி பெற்றார். எங்களது மகள் எங்களையும், ஒட்டுமொத்த கிராமத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார். முதல் போர் விமானி என்ற கனவை அவர் நிறைவேற்றியுள்ளார்’ என்று பெருமையுடன் கூறினார்.

Related Stories: