×

அடுத்த 5 ஆண்டுகளில் 14 நமீபியா சிறுத்தைகள் வருது: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘சமீபத்தில், நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு  கொண்டு வரப்பட்டு எட்டு சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில்  விடப்பட்டன. இதில் 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கும். தற்போது 8 சிறுத்தைகளும் வனப்பகுதியில் வேட்டையாடத் தொடங்கியுள்ளன.

அவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். இதற்காக நமீபியா அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வரும் திட்டத்திற்காக ரூ .38.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Union Minister , 14 Namibia leopards to arrive in next 5 years: Union minister informs
× RELATED சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம்...