பிடன் - ஜெலென்ஸ்கி சந்திப்பு எதிரொலி; போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: ரஷ்ய அதிபர் திடீர் அறிவிப்பு

மாஸ்கோ: பிடன் - ஜெலென்ஸ்கி சந்திப்பு எதிரொலியாக உக்ரைன் மீதான  போரை முடிவுக்கு கொண்டு வர தயார் என்று ரஷ்ய அதிபர் புடின் திடீரென அறிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நடக்கும் உக்ரைன் - ரஷ்ய மோதலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பிடனை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் சந்தித்து, இருதரப்பு உறவுகள், ரஷ்யப் படைகளின் மோதல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், ‘உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வரவே விரும்புகிறோம்; விரைவில் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும். ராஜதந்திர தீர்வுகளை நோக்கி பயணிக்கிறோம். அதற்காக பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளோம். இருநாடுகளுக்கு இடையிலான விரோதங்கள் அதிகரித்து வருவது, பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும். மேற்கத்திய நாடுகள் மூலம் ரஷ்ய எண்ணெய் மீது விலை வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரஷ்ய பொருளாதாரம் பாதிக்காது’ என்றார். ஆனால் உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்ய அதிபரின் பேச்சை நம்பவில்லை. ரஷ்யப் படைகளின் தொடர்ச்சியான தோல்விகளை மறைப்பதற்கும், படைகளை பின்வாங்குவதற்கான தந்திரத்தை மேற்கொள்ளும் வகையில் புடின் பேச்சு இருப்பதாக உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகள் கூறியுள்ளன.

Related Stories: