×

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ மரணம்

மும்பை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாஜக பெண் எம்எல்ஏ  முக்தா திலக், சிகிச்சை பலனின்றி இறந்தார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் பேத்தியும், புனே முன்னாள் மேயருமான முக்தா திலக் (57), மகாராஷ்ரா பாஜக எம்எல்ஏவாக இருந்தார். இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு புற்று நோய் பாதிப்பு அதிகமானதால் கடந்த ஒரு மாத காலமாகவே புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : BJP MLA dies of cancer
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...