×

ஐபிஎல் ஏலம் 2023: சாம் கரண் 18.5 கோடி; கேமரூன் கதிரின்17.50 கோடிக்கு ஏலம்..!

கொச்சி: நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை ரூ.2 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் அணி வாங்கியது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் அபிமான டி20 தொடராக விளங்கும் ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசன், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், இந்த சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30க்கு தொடங்கியது. அதில்;

*நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை ரூ.2 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் அணி வாங்கியது
 
*இங்கிலாந்து வீரர் ஹேரி புரூக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது

*மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது

*இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

* இந்திய வீரர் அஜின்கியா ரகானே-வை ரூ.50-லட்சத்துக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

*தென்னாப்பிரிக்க வீரர் ரைலி ரூசோவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

* டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகனாக கலக்கிய, நட்சத்திர வீரர் சாம் கரணை, ரூ.18.50 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ்

* மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை, ரூ.5.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது

* ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை, ரூ.17.50 கோடிக்கு மும்பை அணி வாங்கியது

* இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்-ஐ  ரூ.16.25 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

* மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரானை, ரூ.16 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது

* தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் க்ளாசெனை, ரூ.5.25 கோடிக்கு வாங்கியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

* இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட்டை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

* இங்கிலாந்து வீரர் அதில் ரஷித்தை, ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி

* இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

* முதல் சுற்று ஏலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அகேல் ஹொசின்-ஐ எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

* முதல் சுற்று ஏலத்தில் இங்கிலாந்து வீரர் க்றிஸ் ஜோர்டனை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

* முதல் சுற்று ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஆடம் ஜம்பா-வை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

* ஆஸ்திரேலிய வீரர் ஜை ரிச்சர்ட்சனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1.5 கோடிக்கு வாங்கியது

* இந்திய U-19 வீரர் ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

* ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர் விவ்ராந்த் சர்மாவை, ரூ.2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்

Tags : IPL ,Sam Karan ,Cameron Kadir , IPL 2023 Auction: Gujarat Titans buy New Zealander Kane Williamson for Rs 2 crore
× RELATED கேப்டன் ருதுராஜ் அரை சதம் வீண்: சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்