நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா..!!

டெல்லி: மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் 29ம் தேதிக்கு பதில் முன்கூட்டியே நிறைவு பெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்தி வைத்தார். புதுடெல்லி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 29ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல எம்.பிக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலும், அமளி காரணமாகவும் கூட்டத்தொடர் 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெற்றுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி தொடரை முன்கூட்டியே முடிக்க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்த நிலையில் முடிவடைந்துள்ளது.

மக்களவையில் அலுவல்கள் 97 சதவீதம் நடைபெற்றதாகவும் 13 அமர்வுகளில் மொத்தம் 62 மணி நேரம் 42 நிமிடங்கள் மக்களவையின் அலுவல்கள் நடைபெற்றதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அதேபோல், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களையின் அலுவல் பணிகள் 102 சதவிகிதம் நடைபெற்றதாகவும் 13 அமர்வுகளில் 64 மணி நேரம் 50 நிமிடங்கள் அலுவல்கள் நடைபெற்றதாகவும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

Related Stories: