×

வேலூரில் 525 தூய்மை பணியாளர்களுடன் மாஸ் கிளீனிங் சாலையோரங்களில் படிந்த 18 டன் மண், கால்வாய் குப்பைகள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை

வேலூர் : வேலூரில் 525 தூய்மை பணியாளர்களுடன் மாஸ்கிளீனிங் பணிகள் நேற்று நடந்தது. சாலையோரங்களில் இருந்த 18 டன் மண், கால்வாய் குப்பைகள் மாநகராட்சி மூலம் நேற்று அகற்றப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் கமிஷ்னர் உத்தரவின்பேரில் மாஸ் கிளீனிங் திட்டத்தில் குப்பைகள் அகற்றும் பணிகள் நேற்று நடந்தது. அதன்படி வேலூர் மாநகராட்சி 4வது மண்டலத்தில் சுகாதார அலுவலர் முருகன் தலைமையில், மாஸ் கிளீனிங் பணிகள் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் இருந்து கால்நடை மருத்துவமனை வரை சுமார் 2 கிலோமீட்டர் வரை 4வது மண்டலத்துக்கு உட்பட்ட 250 தூய்மை பணியாளர்கள் கொண்டு ஒரு டன் பிளாஸ்டிக் குப்பைகள், சாலையில் உள்ள மணல், கால்வாய் உள்ள மணல் என்று மொத்தம் 10 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.

அதேபோல், வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் வேலூர்- ஆற்காடு சாலையில், எல்ஐசி எதிரே உள்ள கால்வாய்களில் இருந்து 5 லாரி கொள்ளளவு குப்ைபகள் அகற்றப்பட்டது. வேலூர் எல்ஐசி முதல் காகிதப்பட்டறை டான்சி வரை சாலையோரம் படிந்திருந்த 3 டன் மண் அகற்றப்பட்டது. இந்த பணிகளில் 175 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலம் மாஸ் கிளீனிங் பணி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், காட்பாடி விஜிராவ் நகர், காந்திநகர், பழைய காட்பாடி பகுதிகளில் 100க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கொண்டு சுமார் 5 டன் மண் அகற்றப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சியில் மாஸ் கிளீனிங் பணிகள், நேற்று நடந்தது. மாநகராட்சியில் மொத்தம் 525 தூய்மைப்பணியாளர்கள் மூலம், சுமார் 18டன் மண் மற்றும் கால்வாய் குப்பைகள் அகற்றப்பட்டது, என்றனர்.


Tags : Vellore , Vellore: Mask cleaning work was done yesterday with 525 sanitation workers in Vellore. 18 tons of soil on roadsides, canal
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...